ஜெர்மனியில் கொந்தளித்த ஜனாதிபதி ரணில்
3 ஐப்பசி 2023 செவ்வாய் 07:24 | பார்வைகள் : 3852
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜெர்மனியின் DW International செய்தி சேவை ஊடகவியலாளருக்கும் இடையிலான நேர்காணல் காரசாரமான கருத்து பரிமாற்றம் ஏற்பட்டுள்ளது.
சனல் 4 காணொளி மற்றும் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோபமாக பதிலளித்தார்.
ஊடகங்கள் முட்டாள்தனமாக பேசுவதாகவும், சில மேற்குலக நாடுகள் இலங்கை போன்ற ஆசிய நாடுகளை இரண்டாம் தரத்தில் நிறுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 காணொளி தொடர்பில் ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கர்தினால்களுடன் இணைந்து செயற்படாது கத்தோலிக்க ஆயர் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட மாட்டாது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 மற்றும் இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் ஆகியோர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.