Paristamil Navigation Paristamil advert login

36°C வெப்பம் பதிவு!

36°C வெப்பம் பதிவு!

3 ஐப்பசி 2023 செவ்வாய் 07:26 | பார்வைகள் : 5605


கடந்த இரு தினங்களாக பிரான்சில் கடுமையான வெப்பம் வாட்டியிருந்தது. ஒக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில் நிலவும் காலநிலையை விட அதிகளவு வெப்பம் நேற்று திங்கட்கிழமை பதிவானது.

Landes நகரில் அதிகபடசமாக நேற்றைய தினம் 36°C வரை வெப்பம் பதிவானது. 1988, 1985 ஆம் ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வெப்பங்களின் அளவினை இவ்வருடத்தின் ஒக்டோபர் மாதம் முறியடித்துள்ளது. இந்த பருவகாலத்தில் நிலவும் வெப்பத்தினை விட 10 தொடக்கம் 15°C வரை அதிக வெப்பம் பதிவாகியிருந்தது.

Orthez (Pyrénées-Atlantiques) நகரில் 35.7°C வெப்பமும்,

Biarritz (Pyrénées-Atlantiques) நகரில் 33.1°C வெப்பமும், 

Clermont-Ferrand (Puy-de-Dôme) நகரில் 32.8°C வெப்பமும்,

Brive (Corrèze) நகரில் 32.6°C வெப்பமும், 

Saint-Étienne (Loire) நகரில் 32.4°C வெப்பமும் பதிவாகியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று திங்கட்கிழமை அதிகளவு வெப்பம் நிலவியிருந்ததை அடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை வானிலை வழமைக்கு மாறியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்