ஐரோப்பாவில் பெருத்த வரவேற்பை பெற்று வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் நிகழ்ச்சி !

3 ஐப்பசி 2023 செவ்வாய் 16:48 | பார்வைகள் : 9353
இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரதும் பெருத்த வரவேற்பை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சி ஐரோப்பாவில் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியில், பிரித்தானியாவில் அரங்கு நிறைந்த பிரமாண்ட நிகழ்வாக இசைநிகழ்ச்சி நடந்துள்ள நிலையில், அடுத்து சுவிசிலும் பிரான்சிலும் இடம்பெற இருக்கின்றது. சுவிசில் முன்னறிவிக்கப்பட்ட நிகழ்வுக்கான முற்பதிவுகள் அரங்கினை நிறைத்துள்ளதால், மறுநாளும் இரண்டாவது நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
தனது ஐரோப்பிய பயணத்தின் நிறைவாக எதிர்வரும் ஒக்ரோபர் 13ம் நாள் வெள்ளிக்கிழமை பிரான்சில் தனது இசைரசிகர்களை இசையால் ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சந்திக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் ஸ்ருதிலயா நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருவாக நிறுவனர் திரு.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சியினை காண விரும்பும் இளையவர்களுக்கான சிறப்பு விலைக்கழிவு, சுகயீனமுற்றவர்கள் இலகுவாக காண்பதற்கான வழிமுறை, தவணை முறையில் பணம் செலுத்துவதற்கான வசதி என பல்வேறு சலுகைகளை ஸ்ருதிலயா வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
பரிஸ் பேர்சி அறீனா அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த இசைக்கொண்டாட்டத்துக்கான கதவுகள் மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இரவு 8 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி 11 மணிக்கு நிறைவுறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1