Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : வீதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்!

பரிஸ் : வீதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்!

3 ஐப்பசி 2023 செவ்வாய் 17:53 | பார்வைகள் : 9927


பரிசைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் வீதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி அளவில் வீடு நோக்கி நடந்து சென்றபோது குறித்த பெண்ணை வழிமறித்த நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக அவர் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார். 27 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்குச் சென்று காவல்துறையினரை அழைத்ததாகவும், அவரது ஆடைகளை கழுவாமல் வைத்திருந்து, காவல்துறையினருக்கு ஆதாரங்களுக்காக சமர்ப்பித்ததாக அறிய முடிகிறது.

அவரது குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(புகைப்படத்தில் : 11 ஆம் வட்டார காவல்நிலையம்)

வர்த்தக‌ விளம்பரங்கள்