Paristamil Navigation Paristamil advert login

ஆர்மேனியாவுக்கு ஆயுதங்கள் வழங்கும் பிரான்ஸ்!

ஆர்மேனியாவுக்கு ஆயுதங்கள் வழங்கும் பிரான்ஸ்!

3 ஐப்பசி 2023 செவ்வாய் 18:47 | பார்வைகள் : 9089


ஆர்மேனியாவில் உள்ளூர் யுத்தம் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்க உள்ளதாக பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே உள்ள பக்கத்து நாடுகளான Armenia மற்றும் Azerbaijan இற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் எவ்வித தூண்டுதல் உணர்வும் இல்லாமல் பொறுப்புடன் செயற்படும் என அறிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் (La ministre des Affaires étrangères)  Catherine Colonna இன்று செவ்வாயன்று ஆயுங்கள் வழங்குவதை உறுதிப்படுத்தினார்.

ஆர்மேனியாவின் யெரேவன் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், “எண்ணை வருவாயை பிரதானமாக கொண்டுள்ள Azerbaijan துருக்கிய ஆதரவுடன் இணைந்து ஆயுத நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதனை அந்நாடு கைவிடவேண்டும்!” என அமைச்சர் தெரிவித்தார்.

அதையடுத்து, ஆர்மேனியாவுக்கு இராணுவ தளபாடங்கள் வழங்கும் ஒப்பந்தம் ஒன்றில் பிரான்ஸ் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். என்னவிதமான தளபாடங்கள் அல்லது ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. 

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த இரு நாடுகளுக்கும் எல்லை பிரச்சனையே இந்த தீவிரமான யுத்தமாக மாறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நார்கோனா - காராபாக் நகரங்களில் இருக்கும் மலைக்கு சொந்தம் கொண்டாடும் இரு நாடுகளும், குறித்த மலையினை தங்களது எல்லைக்குள் கொண்டுவர இந்த யுத்தத்தை தொடர்ந்துள்ளன. இதுவரை அங்கு 190 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்