Paristamil Navigation Paristamil advert login

தயிர் பூரி

தயிர் பூரி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 13459


 பொதுவாக சாட் உணவுப்பொருட்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். அத்தகைய சாட் பொருட்களை மழைக்காலத்தில் கடைகளில் வாங்கி சாப்பிட்டால், பல்வேறு நோய்களுக்கு விரைவில் பாதிக்கக்கூடும். குறிப்பாக பல ஆபத்தான காய்ச்சல்களுக்கு உள்ளாகக்கூடும். ஏனெனில் இவை தெருக்களின் ஓரங்களில் விற்கப்படுவதால், அவற்றை வாங்கி சாப்பிடும் போது நோய்த்தொற்றுகளானது ஏற்படும். எனவே அந்த சாட் பொருட்களை கடைகளுக்கு பதிலாக வீட்டிலேயே செய்து நிம்மதியாக சாப்பிடுங்கள். அது எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை சாட் உணவுப்பொருட்களில் ஒன்றான தஹி பூரி என்னும் தயிர் பூரியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள். 

 
தேவையான பொருட்கள்: 
 
சின்ன பூரி - 7-8 
தயிர் - 1/2 கப் 
ஓமப்பொடி/சேவ் - 1 கையளவு 
வேக வைத்த பச்சை பயறு - 1/4 கப் 
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/4 கப் 
புதினா சட்னி - 2 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி சட்னி - 2 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) 
சாட் மசாலா - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, சீரகப் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்பு ஒரு தட்டில் சின்ன பூரிகளை வைத்துக் கொண்டு, அவற்றின் நடுவே லேசாக உடைத்துவிட்டு, அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, பச்சை பயிறை வைக்க வேண்டும். பிறகு அவற்றின் மேல் தயிர் ஊற்றி, வெங்காயத்தை தூவி விட்டு, பின் புதினா, கொத்தமல்லி சட்னிகளை ஒவ்வொன்றின் மேலும் ஊற்றி விட வேண்டும். 
 
அடுத்து அதன் மேல் மிளகாய் தூள், சாட் மசாலா தூவி, இறுதியில் ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான தயிர் பூரி ரெடி!!!
 
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்