ஜொந்தாம் படையில் இணைக்கப்படும் 238 புதிய வீரர்கள்!
2 ஐப்பசி 2023 திங்கள் 14:42 | பார்வைகள் : 3780
புதிதாக 238 ஜொந்தாமினர் பணிக்கு அமர்த்தப்பட உள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
ஒரு மாவட்டத்துக்கு மூன்று அல்லது நான்கு வீரர்கள் வீதம் மொத்தமாக 238 வீரர்களை முதல்கட்டமாக பணியமர்த்தப்பட உள்ளதாக அவர் அறிவித்தார். முன்னதாக ஜனாதிபதி மக்ரோன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, 2027 ஆம் ஆண்டினை இலக்கு வைத்து 500 ஜொந்தாமினர் பணிக்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என உறுதியளித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக இந்த முதல்கட்ட படையினை அவர் அறிவித்துள்ளார்.
Sisteron (Alpes-de-Haute-Provence), Cagnes-sur-Mer (Alpes-Maritimes), Lisieux (Calvados), Guéret (Creuse), Besançon (Doubs), Mont-Saint-Michel (Manche) மற்றும் Rambouillet (Yvelines) போன்ற நகரங்களுக்கு இந்த புதிய வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும், கடல்கடந்த நிர்வாகப்பிரிவில் Saint-Laurent-du-Maroni (Guyana), Fort-de-France (Martinique) மற்றும் Papeete (French Polynesia) போன்ற நகரங்களுக்கும் அவர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அறிய முடிகிறது.