Paristamil Navigation Paristamil advert login

இன்று (02/10) பிரான்சில் இரண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம். சுகாதார அமைச்சு.

இன்று (02/10) பிரான்சில் இரண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம். சுகாதார அமைச்சு.

2 ஐப்பசி 2023 திங்கள் 15:36 | பார்வைகள் : 3500


இன்று நாடுமுழுவதும் இரண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் சுகாதார அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஒன்று COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, அடுத்து மாணவ, மாணவியர்களுக்கு  papillomavirus வைரசுக்கு எதிரான தடுப்பூசி நடவடிக்கை.

அண்மைக்காலமாக COVID-19 நோய்த்தொற்றின் அளவு அதிகரித்து வருகிறது. கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், தொற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என சுகாதார கட்டமைப்புகள் அரசுக்கு வழங்கிய ஆபத்தான அறிவுறுத்தல்களை அடுத்து, ஒக்டோபர் 17ம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள், முன்னகர்த்தப்பட்டு இன்று ஒக்டோபர் 2ம் திகதி ஆரம்பிக்க பட்டுள்ளது. 

முதல் கட்டமாக வயோதிப இல்லங்கள், மருந்துமனைகள், நீரழிவு நோய் போன்ற நிரந்தர நோய்கள் உள்ளவர்களுக்கு, நோய்த்தொற்று சுலபமாக பரவக்கூடிய உடல்நலம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நடத்தப்பட்டுகின்றது.

இதேபோன்று இரண்டாவது நடவடிக்கையாக
இடைநிலை கல்லூரிகளில் 'collège' 5ம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 'papillomavirus'  வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியது.

குறித்த  papillomavirus வைரஸ் இளம் வயதினரை முதலில் தாக்குகிறது. இதன் விளைவுகள் பின்னாளில் மார்பகப் புற்றுநோய், மலவாசல், பிறப்புறுப்பு போன்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கு காரணமாக அமைகிறது. ஏறத்தாழ பிரான்சில் ஆண்டொன்றுக்கு 6.000 பேர் இத்தகைய புற்றுநோய்க்கு ஆளாகின்றனர் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சில் உள்ள 7.000 கல்லூரிகளில் பயிலும் 800.000 மாணவ, மாணவியர்களுக்கு குறித்த தடுப்பூசி செலுத்தும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயமானது அல்ல என்றும், பெற்றோரின் அனுமதியுடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்