பரிசில் மூட்டைப்பூச்சி தொல்லை - ஒலிம்பிக் போட்டிகளில் தாக்கம்!
2 ஐப்பசி 2023 திங்கள் 15:51 | பார்வைகள் : 4564
பரிசில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ள மூட்டைப்பூச்சி விவகாரம், அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது பலத்த தாக்கத்தினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது 15 மில்லியன் வெளிநாட்டவர்கள் பரிசுக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பரிசில் மெற்றோக்களில், பேருந்துகளில், திரையரங்குகளில் என பல்வேறு இடங்களில் மூட்டைப்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், கனடா போன்ற பல்வேறு நாடுகளில் இது தொடர்பான செய்திகள் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிமை வெளியான பல்வேறு ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக இந்த மூட்டைப்பூச்சி விவகாரம் மாறியிருந்தது. “மூட்டைப்பூச்சி பரிசை தாக்குகிறது!” என தலைப்பிடப்பட்டு இன்றைய NBC தொலைக்காட்சி (அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி) காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவின் Morning post மற்றும் பிரித்தானியாவின் The Guardian பத்திரிகையிலும் நேற்றைய தலைப்புச் செய்தியாக இதுவே அமைந்திருந்தது.
இந்த மூட்டைப்பூச்சி பிரச்சனை ஒலிம்பிக் போட்டிகளில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால், பிரான்ஸ் இது தொடர்பைல் தீவிர நடவடிக்கையினை முடுக்கிவிட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் Clément Beaune, தொழிற்சங்கத்தினருடன் இவ்வாரத்தில் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட உள்ளார்.