அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு
.jpeg)
5 ஐப்பசி 2023 வியாழன் 08:40 | பார்வைகள் : 14213
அமெரிக்காவில் உள்ள மோர்கன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
அதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வன்முறை அதிகரித்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால்சரமாரியாக சுட தொடங்கினார்.
இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 5 மாணவர்கள் காயம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025