இலங்கையில் டிசம்பர் மாத தவணை விடுமுறையில் மாற்றம்

5 ஐப்பசி 2023 வியாழன் 10:45 | பார்வைகள் : 6086
இலங்கையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதத்தில் நடைபெறுவதால் டிசம்பர் மாத தவணை விடுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி டிசம்பர் 22ஆம் திகதி முதல் பாடசாலை தவணை விடுமுறை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஜனவரி 2ஆம் திகதி முதல் மீள ஆரம்பமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மற்றைய பாடசாலைகள் உயர்தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் பெப்ரவரி மாதத்தில் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.