அதிர்ச்சித் தரவு ! லீனா -எமில் - தொடர்சியாக 43.202 பிள்ளைகளைக் காணவில்லை!!
5 ஐப்பசி 2023 வியாழன் 11:09 | பார்வைகள் : 5044
இந்த வருடம் 2 வயதுடைய எமில் மற்றும் 15 வயதுடைய லீனா காணமற்போயுள்ளமை பெரும் பரபரப்பையும் அச்சத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் உள்துறை அமைச்சின் தகவல் பெரும் அதிர்ச்சியை வழங்கி உள்ளன.
2022 ஆம் ஆண்டில் மட்டும் 43.000 பிள்ளைகளைக் காணவில்லை என்ற முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், ஒவ்வொரு வருடமும் 40.000 மதுல் 50.000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனாலும் இவற்றில் 95 சதவீதத்திற்கும் அதிகமாக தாங்களாகவே வீட்டை விட்டு ஓடியவர்களாகவும் 3 நாட்கள் முதல் 3 மாதத்திற்குள் தாங்களாகவே வீடு திரும்பியவர்களாகவே இருந்துள்ளது எனவும், கடந்த வருடம் வந்த 43.000 முறைப்பாடுகளில் 1.140 மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதிலும் 56 சதவீத பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் திரும்ப வந்துள்ளார்கள் என அறிவித்துள்ளதாகவும், உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் பல காணாமற்போனவர்கள் 20 வருடங்கள் கழித்தும் கண்டுபிடிக்காமற் போன வரலாறுகள் உண்டு.
தற்போது எமிலி மற்றும் லீனா விசாரணைகள் எங்கு கொண்டு செல்லப் போகின்றன என்பது கேள்விக் குறியாகவே உள்ளன.