மீண்டும் விற்பனைக்கு வரும் iPhone 12!

5 ஐப்பசி 2023 வியாழன் 13:51 | பார்வைகள் : 11775
பிரான்சில் ஐபோன் 12 தொலைபேசிக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் விற்பனையைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் ஐபோன் 12 தொலைபேசி விற்பனைக்கு அனுமதிக்கப்படுவதாக பிரான்சின் மின்காந்த அலை கட்டுப்பாட்டு சபை (l’Agence nationale des fréquences) அறிவித்துள்ளது. குறித்த தொலைபேசி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளது மின்காந்த அலைகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது மென்பொருள் தரவேற்றம் (Software Update) மூலமாக இந்த அளவு சரிசெய்யப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆப்பிள் நிறுவனம் தனது தொலைபேசிகள் பலவற்றுக்கு iOS 17 மென்பொருள் தரவேற்றம் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1