சீனாவில் மூடப்படும் மகப்பேறு மருத்துவமனைகள்... அதிர்ச்சி தகவல்
6 ஐப்பசி 2023 வெள்ளி 07:57 | பார்வைகள் : 3161
சீனாவில் பிறப்பு விகிதம் கடுமையாக சரிவடைந்துள்ளதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் Zhejiang மாகாணத்தில் பல மருத்துவமனைகளில் மகப்பேறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Jiangsu மற்றும் Guangdong பகுதிகளிலும் மகப்பேறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளது அல்லது எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் 2022ல் வெறும் 9.56 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.
2021-ஐ ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் குறைவாக காணப்படுகின்றது.
அதாவது சீனாவில் கொடூரமான பஞ்சம் ஏற்பட்ட 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகை கடுமையாக சரிவடைந்துள்ளது.
வயதானோர் எண்ணிக்கை அதிகரிகரித்து காணப்படுவதுடன் சரிவடைந்து வரும் மக்கள்தொகை காரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய சிக்கலை உணர்ந்துள்ள அரசியல் தலைவர்கள், பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றனர். 2016ல் இருந்தே குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்ற திட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து மூன்று பிள்ளைகள் வரையில் பெற்றுக்கொள்ளலாம் என தம்பதிகள் ஊக்குவிக்கப்பட்டனர். சில மாகாணங்கள் ஊக்கத்தொகையும் அறிவித்தது. இருப்பினும், மிக குறைவான தாக்கத்தையே இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்தின.
மட்டுமின்றி, தற்போதைய சூழலில் பிள்ளை வளர்ப்பு என்பது பொருளாதார ரீதியாக சாத்தியமற்ற ஒன்று என பெண்கள் பலர் கருதத் தொடங்கியுள்ளனர். மேலும், அதிகம் படித்த பெண்கள், பிள்ளை பெற்றுக்கொள்வதில்லை என்ற முடிவுக்கும் வந்துள்ளனர்.
மகப்பேறு மருத்துவமனைகள் மூடப்படுவதற்கு சிக்கலான பிரசவ எண்ணிக்கையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
மேலும், பயிற்சி பெற்ற ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும் மகப்பேறு பிரிவுகள் மூடப்படுவதாக கூறுகின்றனர்.