Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் பாடசாலைகளை மூட வைத்த மூட்டை பூச்சிகள்.

பிரான்சில் பாடசாலைகளை மூட வைத்த மூட்டை பூச்சிகள்.

6 ஐப்பசி 2023 வெள்ளி 09:17 | பார்வைகள் : 9934


பிரான்சில் 1500 மாணவர்கள் இன்று 7 பாடசாலைகள் மூடப்பட்டதால் வீடுகளுக்கு திரும்பினர் என பிரான்ஸ் தேசிய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அவை Marseille (Bouches-du-Rhône), Pontet (Vaucluse), Louhans (Saône-et-Loire),  Villefranche-sur-Saône (Rhône),  Saint-Dié-des-Vosges (Vosges), Strasbourg et மற்றும் Haguenau (Bas-Rhin). மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் என அறியமுடிகிறது.

இங்கு மூட்டைப்பூச்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதினால் பாடசாலைகளை சுத்தம் செய்யவும், அதேவேளை மூட்டைப்பூச்சிகளின் தொல்லையால் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க வருகைதராததினாலும் மூடப்பட்டது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் ஒருசில பாடசாலைகளில் மூட்டைப்பூச்சிகளின் தொல்லை அதிகம் உள்ள பகுதிகள் மட்டும் மூடப்பட்டு மாணவர்கள் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்