Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

இலங்கையில் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

4 ஐப்பசி 2023 புதன் 15:11 | பார்வைகள் : 2976


வணிக வாகனங்கள் 67 மற்றும் எச்.எஸ்.குறியீட்டு இலக்கம்299 இன் கீழ்வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்தவாரம் தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று விஷேட உரையொன்றினை ஆற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தனிப்பட்ட வாகனங்கள் தொடர்பிலான எச்.எஸ். குறியீட்டு இலக்கம் 304 இற்கான இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்படுவது தொடர்பில் இதுவரை அரசு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்,

"தற்போதுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டியதன் காரணமாக சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

"குறிப்பாக சுங்கத் திணைக்களம் பாதிக்கப்பட்டதுடன், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் உட்பட சிறு வணிகர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டனர். அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன."

"எதிர்வரும் வாரத்தில் எச்.எஸ்.குறியீட்டு இலக்கம் 304க்கு பொருந்தக்கூடிய கட்டுப்பாடுகளைத் தவிர, தனியார் வாகனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளது." என அவர் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்