Seine-Saint-Denis : இரண்டு பாடசாலைகளில் கண்டறியப்பட்ட மூட்டைப்பூச்சிகள்!

5 ஐப்பசி 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 8414
Seine-Saint-Denis நகரில் உள்ள இரண்டு பாடசாலைகளில் மூட்டைப்பூச்சிக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியான சுத்திகரிப்பு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Noisy-le-Grand நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி மூட்டைப்பூச்சி அடையாளம் காணப்பட்டதாக நகரசபைக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பாடசாலைக்குச் சென்று மேற்பார்வையிட்டு, மூட்டைப்பூச்சி இருப்பதினை உறுதி செய்துவிட்டு, செப்டம்பர் 29 ஆம் திகதி அப்பாடசாலையில் சுத்திகரிப்பு பணி இடம்பெற்றது.
அதேவேளை, Noisy-le-Grand நகரில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு பாடசாலையிலும் இந்த மூட்டைப்பூச்சிகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.