Paristamil Navigation Paristamil advert login

இறால் சில்லி வறுவல்

இறால் சில்லி வறுவல்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9726


கடல் உணவுப் பிரியர்களுக்கு நிச்சயம் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய இறாலை இதுவரை கிரேவி, குழம்பு என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த இறலை கொண்டு அருமையான முறையில் ஒரு சில்லி வறுவல் செய்யலாம். மேலும் இந்த இறால் சில்லி வறுவலுடன் தேங்காயை துருவி சேர்த்திருப்பதால், அதன் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.
எனவே விடுமுறை நாட்களில் இறால் வாங்கினால், அப்போது இந்த இறால் சில்லி வறுவலை முயற்சி செய்து பாருங்கள். இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:
 
இறால் - 200 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 
செய்முறை:
 
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு ஒரு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
 
பின்பு கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் இறாலை வேக வைக்க வேண்டும்.
 
அடுத்து மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் அனைத்து பொருட்களும் நன்கு வேகுமாறு 5-6 நிமிடம் வதக்கி இறக்கினால், சூப்பரான இறால் சில்லி வறுவல் ரெடி!!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்