Paristamil Navigation Paristamil advert login

கேரட் சீஸ் சப்பாத்தி

கேரட் சீஸ் சப்பாத்தி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10021


 விடுமுறை நாட்களில் தான் காலை வேளையில் பொறுமையாக சாப்பிட முடியும். அதிலும் அப்படி காலையில் சமைக்கும் போது சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புவோம். உங்களுக்கு அப்படி வித்தியாசமாக சமைத்து சாப்பிட தோன்றினால், கேரட் சீஸ் சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள்.

இது ஒரு ஆரோக்கியமான காலை உணவாகும். வேண்டுமானால் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த கேரட் சீஸ் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
 
 
தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 1 கப்
கேரட் - 2 (துருவியது)
சீஸ் - 1/4 கப் (துருவியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைய வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய கேரட்டை சேர்த்து 3-5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
 
பின் ஒரு பௌலில் அந்த கேரட்டை சேர்த்து, அத்துடன் துருவிய சீஸ், சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின் அதில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போன்று லேசாக தேய்த்து, அதன் நடுவே சிறிது கேரட் கலவையை வைத்து, மடித்து, மீண்டும் சப்பாத்தி போன்று கலவை வெளியே வராதவாறு தேய்க்க வேண்டும். இதேப்போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்க்க வேண்டும்.
 
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு, எண்ணெய்/நெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், கேரட் சீஸ் சப்பாத்தி ரெடி!!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்