ரஜினி 171வது படம் குறித்து லோகேஷ்!

8 ஐப்பசி 2023 ஞாயிறு 13:14 | பார்வைகள் : 9105
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் தலைவர் 171’
இந்த படத்தின் அறிவிப்பு கடந்த நாட்களுக்கு முன்னால் வெளியான நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. முதல் கட்டமாக தற்போது ரஜினிகாந்த் ’தலைவர் 170’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தெரிகிறது.
மேலும் இந்த படத்தில் ’லியோ’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணிபுரிய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் சில காட்சிகள் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி ’தலைவர் 171’ படத்தின் பாடல் ஆசிரியராக ’லியோ’ படத்திற்கு இரண்டு பாடல்களை எழுதிய விஷ்ணு எடாவன் தான் எழுதப் போகிறார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் இது ஒரு புதுமையான முயற்சி கொண்ட படம் என்றும் தனது முதல் படமான ’மாநகரம்’ படத்தை இயக்குவதற்கு முன்பு இந்த படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதி விட்டதாகவும் இந்த கதையை கேட்ட 20 நிமிடத்தில் ரஜினிகாந்த் ஓகே சொல்லி விட்டதாகவும் தெரிகிறது.
மொத்தத்தில் ’லியோ’ ரிலீஸ்க்கு பின்னர் முழு வீச்சில் லோகேஷ் கனகராஜ் ’தலைவர் 171’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் இறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3