Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்..!

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கமல்..!

8 ஐப்பசி 2023 ஞாயிறு 13:19 | பார்வைகள் : 2789


உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு வார்னிங் ஸ்ட்ரைக் கொடுத்தார் என்பதும் மூன்று முறை ஸ்ட்ரைக் பெற்றால் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் ஆரம்பம் முதலே மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கேப்டன் விஜய் போட்டியாளர்கள் மத்தியில் பேசும்போது ’பிரதீப் அந்தோணி தன்னை ஷூவால் இடித்துவிட்டு சென்றதாகவும், எனக்கு மிகவும் பாசமுள்ள நண்பர்கள் வெளியே இருக்கிறார்கள், அவர்கள் நீங்கள் வெளியே சென்றால் பாசமாக கவனிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

அதேபோல் நான் இப்படி கையால் அடித்தால் மூக்கு வாயெல்லாம் உடைந்து விடும் என்றும் அவர் வன்முறையாக பேசினார். இதனை விஷ்ணு எதிர்த்து கேட்டார் என்பதும் பவா செல்லதுரை உட்பட சக போட்டியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவில் கமல்ஹாசன், கேப்டன் விஜய்க்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி உள்ளார். எனக்கும் வெளியே எல்லாம் ஆள் இருக்கிறது என்று நீங்கள் கூறினீர்கள் என்று கூறிய போது விஜய் அதை மறுத்தார் ஆனால் கமல்ஹாசன் குறும்படம் என்ற ஒன்று இருக்கிறது என்று கூறியவுடன் சக போட்டியாளர்கள் கைதட்டி ரசித்தனர்.

மேலும் ஸ்ட்ரைக் அட்டையை காண்பித்த கமல்ஹாசன், இது உங்களுடைய வன்முறை பேச்சுக்கான என்னுடைய கண்டனங்கள், இது மீண்டும் நிகழ்ந்து, மூன்று முறை நீங்கள் ஸ்டிரைக் அட்டையை வாங்கி விட்டீர்கள் என்றால், சந்தோஷமாக நீங்கள் என்னிடம் வந்து பேசிவிட்டு ஜாலியாக வீட்டுக்கு போய்விடலாம் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கமல்ஹாசன் எச்சரிக்கையை கேட்டதும் விஜய் அதிர்ச்சி அடையும் காட்சிகள் புரமோவில் உள்ளன. அந்த வகையில் இன்றைய எபிசோட் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்