Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் நடிகை !

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும்  நடிகை !

8 ஐப்பசி 2023 ஞாயிறு 14:55 | பார்வைகள் : 8847


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இடையே திடீரென போர் ஏற்பட்ட நிலையில் இஸ்ரேல் நாட்டிற்கு திரைப்பட விழா ஒன்றுக்கு சென்ற பிரபல நடிகை ஒருவர் சிக்கிக் கொண்டதாகவும் அவரை மொபைல் போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என்று செய்திகள் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் என்ற பயங்கரவாத குழு திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் தற்போது அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் 300க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும் 700 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு இந்தியா தனது முழு ஆதரவை தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சா என்பவர் இஸ்ரேல் நாட்டில் சிக்கி கொண்டுள்ளதாக தெரிகிறது. அவர் ஹைபா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேல் சென்றதாகவும் அவர் தற்போது அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவரை அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மொபைல் ஃபோனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. நடிகை நஸ்ரத் பரூச்சாவை இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்பி கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சேது, சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த ‘வாலிப ராஜா’ என்ற தமிழ் திரைப்படத்திலும் ‘ராம்சேது’ உட்பட பல பாலிவுட் படங்களிலும் நடிகை நஸ்ரத் பரூச்சா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்