Paristamil Navigation Paristamil advert login

சுவையான... ரவா ரொட்டி

சுவையான... ரவா ரொட்டி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10052


 காலையில் வெறும் தோசை, இட்லி சாப்பிட்டு போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக ரவை ரொட்டி செய்து சாப்பிடுங்கள். இந்த ரவை ரொட்டி செய்வதற்கு அரை மணிநேரம் போதும். அவ்வளவு சீக்கிரம் இந்த ரொட்டியை செய்யலாம்.

மேலும் குழந்தைகளும் இந்த ரவை ரொட்டியை விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி, வேலைக்கு செல்வோருக்கு இது ஒரு அருமையான காலை உணவு. சரி, இப்போது அந்த ரவை ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:
 
 
ரவை - 1 கப் (வறுத்தது)
மைதா - 1/2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1/4 டீஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, கோதுமை மாவு, தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெய் ஊற்றி ரொடி பதத்திற்கு பிசைந்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
 
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து அதனை கையால் ரொட்டி போன்று தட்டி, தோசைக்கல்லில் போட்டு, தீயை குறைத்து, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
 
இதேப்போல் அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டு எடுக்க வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்