Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலில் இரு இலங்கையர்களை காணவில்லை

இஸ்ரேலில் இரு இலங்கையர்களை காணவில்லை

9 ஐப்பசி 2023 திங்கள் 08:45 | பார்வைகள் : 7699


இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடம்பெற்று வருகின்ற மோதலில் மேலுமொரு இலங்கையர் காணமல் போயுள்ளார். அதன்படி, இதுவரை இரு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளார்கள்.

இலங்கை பிரஜைகளில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன்,  இருவர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.  

காயமடைந்த நபர் அப்பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிந்து வந்தவர் ஆவார்.

காணாமல் போன இலங்கையர்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள தூதரகம், அவர்கள் இருக்கும் இடம் தொடர்பான தகவல்களைப் பெற முடியாவிட்டால், மேலதிக உதவிக்காக அவர்களின் விபரங்கள் செஞ்சிலுவைச் சங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்