Paristamil Navigation Paristamil advert login

வல்லாரைக் கீரை தோசை

வல்லாரைக் கீரை தோசை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9811


 வல்லாரைக் கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும். அத்தகைய வல்லாரைக் கீரையை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை தோசை செய்து சாப்பிடலாம்.

இங்கு அந்த வல்லரைக் கீரை தோசையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.
 
 
தேவையான பொருட்கள்:
 
வல்லரைக் கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)
புழுங்கல் அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
கேழ்வரகு - 1/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் கேழ்வரகு ஆகியவற்றை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் அவைகளை நன்கு கழுவி, மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
அடுத்து, அந்த மாவில் வல்லாரைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
 
பின்பு அந்த மாவை தோசைகளாக ஊற்றி எடுத்தால், ஆரோக்கியமான வல்லாரைக் கீரை தோசை ரெடி!!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்