Paristamil Navigation Paristamil advert login

ஆரோக்கியத்தைத் தரும் பயறு கஞ்சி

ஆரோக்கியத்தைத் தரும் பயறு கஞ்சி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 12412


 டயட்டில் இருப்போருக்கு காலையில் எப்போதும் ஓட்ஸ் சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அத்தகையவர்கள் வாரம் ஒருமுறை பயறு கஞ்சியை காலை வேளையில் எடுத்து வரலாம். இந்த பயறு கஞ்சியானது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மேலும் சுவையானதும் கூட.

சரி, இப்போது அந்த பயறு கஞ்சியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
ஆரோக்கியத்தைத் தரும் பயறு கஞ்சி
 
தேவையான பொருட்கள்:
 
அரிசி - 1 கப்
பச்சை பயறு - 3/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 1 பல் (நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 3-4 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 6-8 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
 
செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுக்க வேண்டும்.
 
பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
 
நீரானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பச்சை பயறு சேர்த்து மூடி வைத்து, அரிசி மற்றும் பயறு வேகும் வரை அடுப்பில் வைத்து, வேண்டுமானால் இன்னும் சிறிது நீர் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
 
அரிசி மற்றும் பயறு நன்கு வெந்ததும், அதில் உப்பு மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து கிளறி பரிமாறினால், பயறு கஞ்சி ரெடி!!!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்