Paristamil Navigation Paristamil advert login

நோபல் பரிசு பெற்ற பெண்ணின் கணவரோடு உரையாடிய ஜனாதிபதி மக்ரோன்!

நோபல் பரிசு பெற்ற பெண்ணின் கணவரோடு உரையாடிய ஜனாதிபதி மக்ரோன்!

7 ஐப்பசி 2023 சனி 07:00 | பார்வைகள் : 4668


ஈரானைச் சேர்ந்த சமூகசேவகர் Narges Mohammadi இற்கு நோபல் பரிசு கிடைத்ததை அடுத்து, அவரது கணவரோடு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைபேசி வழியாக உரையாடினார்.

நோபல் பரிசு வென்ற Narges Mohammadi தற்போது ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ளார். அதையடுத்தே அவரது கணவர் Taghi Rahmani உடன் தொலைபேசியில் உரையாடினார் மக்ரோன். நோபல் பரிசு பெற்றமை தொடர்பில் பிரான்ஸ் மகிழ்ச்சியுறுவதாகவும், வாழ்த்துக்களையும் மக்ரோன் தெரிவித்துள்ளார். 


முன்னதாக, "மிகவும் அழுத்தமான முடிவு. மனித உரிமைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு பெண்ணை அங்கீகரிக்கும் மிக வலுவான முடிவு இது!" என நோபல் குழுவினரை ஜனாதிபதி மக்ரோன் வாழ்த்தியிருந்தார். அதையடுத்தே நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவர் தொலைபேசியூடாக் தனது வாழ்த்துக்களை அவர்களோடு பகிர்ந்திருந்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்