புதன்கிழமையில் இருந்து தேடப்படு வந்த சிறுவன் - சடலமாக மீட்பு!

7 ஐப்பசி 2023 சனி 08:00 | பார்வைகள் : 13019
16 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை அவனது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பிரான்சின் கிழக்கு நகரமான Rupt-sur-Moselle (Vosges) இல் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள புல்வெளி பகுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனது சடலத்தை பதசாரிகள் சிலர் நேற்று காலை பார்வையிட்டனர். அதையடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்படு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
குறித்த சிறுவன் கடந்த புதன்கிழமை காலை முதல் காணாமல் போயிருந்ததாகவும், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் சில கடிதங்களை வீட்டில் விட்டுச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற உடற்கூறு பரிசோதனைகளில் இது தற்கொலை எனவும், மூன்றாவது நபரின் தலையீடுகள், தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1