'Bronchite' மூச்சு குழாய் அழற்சிக்கு தீர்வு விரைவில் வருகிறது தடுப்பூசி.
7 ஐப்பசி 2023 சனி 06:57 | பார்வைகள் : 5108
'Bronchite' எனும் மூச்சு குழாய் அழற்சி தொற்று நோய் குளிர்காலத்தில் பரவலாக பலருக்கும் ஏற்படும் ஒரு நோய்தான், குறித்த நோய்
குழந்தைகள், வயதானவர்கள், நோயால் பலவீனமானவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்படுகின்ற போது சிலவேளைகளில் பெரும் ஆபத்தாக மாறிவிடுகிறது.
இதற்கான ஒரு வலுவான தடுப்பூசிக்காக பிரான்ஸ் பலகாலம் காத்திருந்தது. இந்த நிலையில் ஒவ்வொருவருக்குமான தனித் தனி தடுப்பூசிகள், நான்கு ஆய்வகங்களில் இருந்து வரவுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு GSK ஆய்வகங்களில் இருந்தும், ஏனைய வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு Pfizer ஆய்வகத்தில் இருந்தும், குழந்தைகள், நோயால் பலவீனமானவர்களுக்கு Moderna மற்றும் Janssen ஆய்வகங்களில் இருந்தும் வரவுள்ளதாக மேலும் தெரியவருகிறது.
Bronchite' மூச்சு குழாய் அழற்சிக்கு ஆளாகி பிரான்சில் சுமார் 25 000 நோயாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்கள், இதில் வயோதிபர்கள், நோயால் பலவீனமானவர்கள், குழந்தைகள் நோய்த்தாக்கம் அதிகமாகி இறப்புகள் கூட நடந்திருக்கிறது. என மருத்தவ வமனைகள் தெரிவிக்கின்றன.