யாழில் தாய், மகளுக்கு நள்ளிரவு காத்திருந்த அதிர்ச்சி!

7 ஐப்பசி 2023 சனி 07:23 | பார்வைகள் : 8899
யாழ்.தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனம் தெரியாத குழுவினர் பொருட்களுக்கு தீயிட்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி மற்றும் வீட்டு தளபாடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
வீட்டில் தாய், மகள் பேரப்பிள்ளைகள் என ஐவர் இருந்துள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை.
தீ பரவுவதை கண்ணுற்ற அயலர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1