Paristamil Navigation Paristamil advert login

கார்ன் பிரியாணி

கார்ன் பிரியாணி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10010


 உணவுகளில் பிரியாணி மிகவும் பிரபலமானது. அத்தகைய பிரியாணி பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அசைவ பிரியாணியை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவர். ஆனால் சைவ பிரியாணி என்றால் அது வெஜிடேபிள் பிரியாணி மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். அதிலும் பல வகைகள் உள்ளன.

 
 
அதில் ஒரு வகை தான் கார்ன் பிரியாணி. இத்தகைய பிரியாணியை காலை மற்றும் மதிய வேளையில் கூட எளிதில் செய்யலாம். இப்போது அந்த கார்ன் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
 
 
தேவையான பொருட்கள்:
 
 
பாசுமதி அரிசி - 2 கப்
கார்ன் - 1 1/2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
தேங்காய் பால் - 1 கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
புதினா - சிறிது (நறுக்கியது)
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 2
கிராம்பு - 5
ஏலக்காய் - 3
தண்ணீர் - 3 கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
 
பாசுமதி அரிசியை நீரில் போட்டு, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் நீரை வடித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்க வேண்டும்.
 
பிறகு அதில் வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி போட்டு, நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா போட்டு வதக்க வேண்டும்.
 
பின்னர் கார்ன் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தேங்காய் பால் மற்றும் உப்பு போட்டு நன்கு கெட்டியான கிரேவி போன்று கொதிக்க வேண்டும்.
 
பின்பு அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி கொதித்ததும், அதில் கழுவிய அரிசியை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
 
இப்போது சுவையான கார்ன் பிரியாணி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, கிரேவியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்