ராகவா லாரன்ஸ் படத்தை விட்டு வெளியேறிய நயன்தாரா?

7 ஐப்பசி 2023 சனி 13:21 | பார்வைகள் : 5890
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளிவந்த சந்திரமுகி 2 படம் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து ஜிகிர்தண்டா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், நயன்தாரா இணைந்து ஹாரர் த்ரில்லர் ஜானரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தை விட்டு நயன்தாரா சமீபத்தில் வெளியேறியதாக கூறப்படுகிறது. அதனால் வேறொரு நாயகியை தேடி வருகின்றனர். மேலும் கதையையும் சற்று மாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதில் ராகவா லாரன்ஸ் தான் ஹீரோ என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள்.