Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் மீது தாக்குதல் : இலவச தொலைபேசி அழைப்புகளை அறிவித்த SFR!

இஸ்ரேல் மீது தாக்குதல் : இலவச தொலைபேசி அழைப்புகளை அறிவித்த SFR!

7 ஐப்பசி 2023 சனி 15:21 | பார்வைகள் : 6369


பிரான்சில் இருந்து இஸரேலுக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தொலைத்தொடர்பு நிறுவனமான SFR அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் Gaza நகரம் மீது பாலஸ்தீனம் மேற்கொண்ட தாக்குதலில் 198 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதை அடுத்து, பிரெஞ்சு தொலைத்தொடர்பு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள உறவுகளைத் தொடர்புகொள்ள கட்டணமற்ற அழைப்புக்களை வரும் திங்கட்கிழமை முதல் அந்த வாரம் முழுவதும் மேற்கொள்ள முடியும் என SFR இன் தாய் நிறுவனமான Altice France இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சற்று முன்னர் இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog உடனும், இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahou உடனும் தொலைபேசியூடாக உரையாடியிருந்ததாக அறிய முடிகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்