Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக்கிலும் இனி கிரிக்கெட்

ஒலிம்பிக்கிலும் இனி கிரிக்கெட்

10 ஐப்பசி 2023 செவ்வாய் 07:24 | பார்வைகள் : 6622


2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது. 

அதன் பிறகு விடுப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும் இணைக்க நூற்றாண்டு கால முயற்சி ஒரு வழியாக வெற்றியின் விளிம்பிற்கு வந்துள்ளது.

குறித்த பரிந்துரை பட்டியலில் பிளாக் கால்பந்தாட்டம், பேஸ்பால், சாப்ட்பால் ஆகிய விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.

141-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மும்பையில் வருகின்ற 15 ஆம் திகதி நடக்கிறது. 

இந்த கூட்டத்தில் கிரிக்கெட்டை சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்