Paristamil Navigation Paristamil advert login

 ஹமாஸ் ஆயுதக்குழுவின் அட்டூழியம்... பலியாகும் மக்கள்

 ஹமாஸ் ஆயுதக்குழுவின் அட்டூழியம்... பலியாகும் மக்கள்

11 ஐப்பசி 2023 புதன் 09:03 | பார்வைகள் : 10003


கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்குள்  ஹமாஸ் ஆயுதகுழுவினர் நுழைந்துள்ளனர்.

பின்னர் காசா எல்லையை ஒட்டி அமைந்துள்ள Kfar Aza என்னும் கிராமத்தை இரண்டு நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள்.

அந்த இரண்டு நாட்களும், 20 நிமிடத்துக்கொருமுறை வீடு வீடாக நுழைந்து, வீட்டுக்குள்ளிருந்தவர்களை கொடூரமாக படுகொலை செய்து வருகின்றனர்.

ஆண்கள், பெண்கள் என ஒருவரையும் விட்டுவைக்காமல், கொடூரமாக அனைவரையும் கொன்று குவித்துள்ளார்கள் அவர்கள்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையன்று அந்த கிராமத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.

ஆனால், கிராமத்துக்குள் நுழைந்த ராணுவ வீரர்களை சக வீரர்கள் தேற்றும் நிலையே அங்கு காணப்பட்டது. 

ஆண்கள் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் சடலங்களாக கண்ட இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கலங்கிப்போனார்கள்.

குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமே 40 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவர்களில் சில குழந்தைகள் மற்றும் பெண்களுடைய தலைகள் வெட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

சிலர் தலையில் சுடப்பட்டிருந்தார்கள், சில குடும்பங்கள் மொத்தமாக உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைத் தளபதிகளில் ஒருவரான Major General Itai Veruv, தன் வாழ்நாளில் தான் இதுபோல் ஒரு கொடூரத்தைக் கண்டதில்லை.

குழந்தைகளும், அவர்களுடைய தாய்மார்களும், தந்தைகளும், தங்களுக்கு பாதுகாப்பு என நம்பிய தங்கள் வீடுகளுக்குள்ளேயே கொல்லப்பட்டுள்ளார்கள்.

இது போர் அல்ல, இது படுகொலை என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்