Paristamil Navigation Paristamil advert login

80% சதவீத சிறுமிகளுக்கு தாங்கள் பருவம் அடையும் விழிப்புணர்வு இல்லை l'association Règles Élémentaires.

80% சதவீத சிறுமிகளுக்கு தாங்கள் பருவம் அடையும் விழிப்புணர்வு இல்லை l'association Règles Élémentaires.

11 ஐப்பசி 2023 புதன் 09:28 | பார்வைகள் : 4983


இன்று (11/10) சர்வதேச சிறுமியர் தினம் இந்த தினத்தையொட்டி, Règles Élémentaires சங்கம் சிறுமிகள் எதிர்நோக்கும் பருவமடைதல் சம்மந்தமான ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் சிறுமிகள் சரியான வயதை அடையும் முன்னரே பருவமடைவது பரவலாக நடந்து வருகிறது. சராசரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பருவமடையும் வயதைவிடவும் ஐந்து, ஆறு மாதங்களுக்கு முன்பும்,  சிலர் ஒராண்டுக்கு முன்னரும் பருமடைகின்றனர் என தெரிவிக்கும் ஆய்வறிக்கை,  இன்று 80% சிறுமிகள் 13 வயதுக்கு முன் பருவமடைகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பிரான்ஸ் கல்விமுறைப்படி 5 ஆம் வகுப்புக்கு முன்னும்,  20% சதவீதம் ஆரம்பப் பள்ளியில் இருக்கும் போதும் பருமடைகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளது. 

ஆனால் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு வகுப்பில் தான் SVT பாடம்  (உடல் கூறுகள், பருவமடைதல்)  பற்றி விளக்கங்கள் கற்பிக்கப்படுகிறது, சிறுமிகள் அதற்கு முன்னரே பருவம் அடைவதால் எந்த விதமான விபரங்களும் இன்றி பயம், மன அழுத்தம், வெறுப்பு, போன்ற நிலைக்கு ஆளாகின்றனர். என குறிப்பிட்டுள்ள அறிக்கையில் சில குற்றச்சாட்டுக்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.

பிரான்சில் பல பாடசாலைகளில் பாதுகாப்பான கழிவறைகள் இல்லை, கழிவறைக் கடதாசிகள் (papier toilette) பற்றாக்குறை, சவர்காரங்கள் இல்லை, வயிற்றுவலி வந்தால் ஓய்வெடுக்க இடம் இல்லை, இது போக சக மாணவர்களின் கேலி, கிண்டல், வெறுப்பு. இதனால் 53% சதவீதமான சிறுமிகள் பாடசாலையை கைவிடுகின்னர். என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறுமியர்களின் பாடத் திட்டத்தை முன்கூட்டியே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்த வேண்டும் பாடசாலைகள் சக ஆண் மாணவர்களுக்கும் இது சம்பந்தமான தெளிவான கல்வி ஊட்டலை வழங்க வேண்டும், மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லாதபடி பாடசாலைகளை பார்த்துக் கொள்ள வேண்டும், அதேபோல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இது பற்றிய விழிப்புணர்வை  சிறிய வயதில் இருந்து சொல்லி கொடுக்க ஆரம்பிக்க வேண்டும், எனவும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்