பார்வையாளர்களை மோதித்தள்ளிய மகிழுந்து - ஒருவர் பலி - இருவர் காயம்!

11 ஐப்பசி 2023 புதன் 10:05 | பார்வைகள் : 14367
Tour de Corse பந்தயத்தின் போது மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி, பார்வையாளர்களை மோதித்தள்ளியது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்று ஒக்டோபர் 10, செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் Corsica தீவின் Muratellu நகரில் இடம்பெற்றுள்ளது. அங்கு இடம்பெற்ற Tour de Corse மகிழுந்து பந்தயத்தின் போது, ஏராளமான ரசிகர்கள் வீதிகளின் இரு பக்கங்களிலும் காத்திருந்தனர். அப்போது அதிவேகமாக பயணித்த பந்தய மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி, பார்வையாளர்கள் மீது பாய்ந்தது.
இதில் 71 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் 70 மற்றும் 73 வயதுடைய மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1