கொழும்பில் மாணவர்கள் மத்தியில் பரவும் நோய்
11 ஐப்பசி 2023 புதன் 10:28 | பார்வைகள் : 4876
கொழும்பில் பாடசாலை மாணவர்களுக்கு கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இனங்காணப்படின், உடனடியாக பாடசாலை வைத்திய அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பரிந்துரைகளை பெற வேண்டும் என, கொழும்பு வலய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து
மேலும், பாடசாலையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்கள் மற்ற மாணவர்களிடமிருந்து தனித்தனியாக வைக்கப்படுவார்கள் என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று முதல் பாடசாலையின் குறித்த வகுப்புகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில், சுமார் 35 மாணவர்கள் இந்த கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 06, 07 மற்றும் 08 ஆகிய வகுப்புகள் இந்த வாரம் மூடப்பட்டுள்ளதாகவும் கொட்டாஞ்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பதும் கொடிகார மேலும் தெரிவித்தார்.
கண் நோய் சுமார் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்றும், குழந்தைகளுக்கு கண் சிவந்து அரிப்பு ஏற்பட்டால் வீட்டில் வைத்தியம் பார்க்க வேண்டாம் என்றும் பெற்றோரிடம் தெரிவிக்கிறார்.