Paristamil Navigation Paristamil advert login

முக்கிய உணவு பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை

முக்கிய உணவு பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை

11 ஐப்பசி 2023 புதன் 12:11 | பார்வைகள் : 3582


எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் ஒரு கிலோ நெத்தலியின் விலை 200 முதல் 250 ரூபாவுக்குள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை, 1250 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை டிசம்பர் மாதமளவில் 850 ரூபாவுக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கோழி இறைச்சி, முட்டை, கருவாடு மற்றும் மீனின் விலைகள் அதிகரித்திருந்தமையால், நாட்டில் போஷாக்கு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்