உணவு வங்கிகளின் தேவையை நாடும் கனேடியர்கள்...
10 ஐப்பசி 2023 செவ்வாய் 06:38 | பார்வைகள் : 4514
கனடாவில் உணவு வங்கிகளின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி அறிதல் வாரம் அல்லது தேங்க்ஸ் கிவிங் வாரத்தில் இவ்வாறு அதிக அளவில் உணவு வகைகளை மக்கள் நாடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண வீக்கம், வீடுகளுக்கான வாடகை கட்டண அதிகரிப்பு, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணிகளினால் நாட்டில் உணவு வங்கிகளின் தேவை அதிகரித்துள்ளது.
கொவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக ரொறன்டோவில் இயங்ககி வரும் ஓர் உணவு வங்கியில் மாதாந்தம் 65000 பேர் வருகை தந்துள்ளனர்.
தற்பொழுது மாதாந்தம் 275000 பேர் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் நிலையில் இந்த உணவு வங்கிகள் மீதான நாட்டம் அதிகரித்துள்ளது.
பொதுவாக கனடாவின் அனேக பகுதிகளில் உணவு வகைகளில் சேவையைப் பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.