அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!
13 ஐப்பசி 2023 வெள்ளி 10:04 | பார்வைகள் : 3207
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(13) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 318 ரூபாய் 08 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 06 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபாய் 82 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் , அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 328 ரூபாய் 82 சதமாக காணப்பட்டது.