Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் d'Arras பகுதியில் உள்ள lycée Gambetta பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விபரங்கள்.

பிரான்சில் d'Arras  பகுதியில் உள்ள lycée Gambetta பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விபரங்கள்.

13 ஐப்பசி 2023 வெள்ளி 12:28 | பார்வைகள் : 4724


பிரான்சில் d'Arras  பகுதியில் உள்ள lycée Gambetta பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விபரங்கள்.

பிரான்சில் Pas-de-Calais பிராந்தியத்தில் உள்ள d'Arras நகரில்  lycée Gambetta எனும் உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை பயங்கரவாதத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது இந்த தாக்குதலில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டுள்ளார் மற்றும் ஒரு பேராசிரியரும் பாதுகாப்பு ஊழியரும் படுகாயம் அடைந்துள்ளார். அவர்களின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

குறித்த உயர்நிலை பள்ளியில் பயின்ற பழைய மாணவன் ஒருவரே  தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதல் நடத்தும் போது "அல்லாஹு அக்பர்" என கோசம் இட்டபடி கத்தியால் மிக்க ஆக்ரோஷமாக அவர்களைத் தாக்கியுள்ளார், உடனடியாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர்கள்  tchétchène நாட்டவர்கள் எனவும் fiché S குற்றப் பதிவில் உள்ளவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து d'Arras நகரில் உள்ள சகல பாடசாலைகளும் முடக்கப்பட்டுள்ளது யாரும் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ அனுமதிக்கப் படவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட உயர் நிலைப் பள்ளிக்கு அதிபர் Emmanuel Macron, கல்வி அமைச்சர் Gabriel Attal ஆகியோர்  நேரடியாக சென்றுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்