Paristamil Navigation Paristamil advert login

முந்திரி பர்ஃபி

முந்திரி பர்ஃபி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10041


 தீபாவளி பண்டிகைக்கு எத்தனையோ பலகாரங்களை செய்வோம். அதிலும் ஒவ்வொரு வருடமும் ஒரே பலகாரத்தை செய்வோம். இந்த வருடம் சற்று வித்தியாசமாக, கடைகளில் வாங்கி சாப்பிடும் முந்திரி பர்ஃபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இது மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. மேலும் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கக்கூடிய உணவுப்பொருட்களில் ஒன்று.

இங்கு அந்த முந்திரி பர்ஃபியின் செய்முறையை கொடுத்துள்ளேம். அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.
 
தேவையான பொருட்கள்:
 
முந்திரி - 1 கப்
சோள மாவு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப்
நெய் - தேவையான அளவு
சில்வர் தாள் - அலங்கரிக்க
 
செய்முறை:
 
முதலில் பிளெண்டரில் முந்திரி மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியில் சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி, பாகு ஆகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
 
பின்பு அதில் அரைத்த முந்திரி பொடியைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
 
அவ்வாறு கிளறும் போது கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது, அடுப்பில் இருந்து இறக்கி, நன்கு மென்மையாகவும் வரை கரண்டி கொண்டு பிசைய வேண்டும்.
 
பின் ஒரு தட்டில் நெய்யை தடவி, அதில் அந்த கலவையை ஊற்றி பரப்பி, பின்பு அதன் மேல் சில்வர் தாளை பதித்து, இறுதியில் வேண்டிய வடிவில் வெட்டினால், சூப்பராக முந்திரி பர்ஃபி ரெடி!!! இதனை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்