Paristamil Navigation Paristamil advert login

முருங்கைக்கீரை தோசை

முருங்கைக்கீரை தோசை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9819


 முருங்கைக்கீரையில் நிறைந்துள்ள நன்மைகளைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே தெரியும். குறிப்பாக உடலின் இரும்புச்சத்து அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் வாரம் ஒருமுறை தவறாமல் உட்கொண்டு வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடலாம். முருங்கைக்கீரையை பொரியல் செய்து தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாறாக அதனைக் கொண்டு தோசை செய்தும் சாப்பிடலாம்.

சரி, இப்போது அந்த முருங்கைக்கீரை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை - 1 கப் 

தோசை மாவு - தேவையான அளவு 

நெய் - சிறிது வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) 

உப்பு - தேவையான அளவு 

 

செய்முறை: 

 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முருங்கைக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும். 

 

பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, தோசை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

 

பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை கொண்டு தோசைகளாக ஊற்றி எடுத்தால், முருங்கைக்கீரை தோசை ரெடி!!! 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்