உலகத்திற்கு பெரிய சவாலாக மாறியுள்ள பயங்கரவாதம் : பிரதமர் மோடி

13 ஐப்பசி 2023 வெள்ளி 14:23 | பார்வைகள் : 10798
மனித நேயத்திற்கும், பூமிக்கும் பயங்கரவாதம் பெரிய சவாலாக மாறி உள்ளது என்பதை உலக நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜி20 பார்லிமென்ட் தலைவர்கள் உச்சி மாநாட்டின்( பி20) துவக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:
இந்தியா நிலவில் இறங்கியது. ஜி20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. இன்று, நாம் பி20 உச்சி மாநாட்டை நடத்துகிறோம்.
இந்த உச்சி மாநாடு நமது நாட்டு மக்களின் சக்தியைக் கொண்டாடும் ஊடகமாக உள்ளது. ஜனநாயகத்தின் தாய் மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பி20 உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவாதம் மற்றும் விரிவான வாதங்கள் செய்வதற்கான முக்கிய இடமாக உலகம் முழுவதும் உள்ள பார்லிமென்ட்கள் விளங்குகின்றன.
பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் 32 லட்சம் பேர் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 50 சதவீதம் பேர் பெண்கள். அனைத்து துறைகளிலும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்
மோதல்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது. பிளவுபட்ட உலகம், நம் முன் உள்ள சவால்களுக்கு தீர்வைக் கொடுக்காது.
இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம். ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம். அனைவரின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக உழைக்க இதுவே நேரம்.
பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கூட்டம் நடந்து கொண்டிருந்த போது பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
பூமிக்கும், மனித நேயத்திற்கும் பயங்கரவாதம் எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகம் உணர்ந்து கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக, எவ்வாறு ஒருங்கிணைந்து போராடுவது என்பது குறித்து உலகில் உள்ள பார்லிமென்ட் மற்றும் அதன் உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும்.
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நோக்கில் உலகத்தை பார்க்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1