Paristamil Navigation Paristamil advert login

செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம்?

செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம்?

13 ஐப்பசி 2023 வெள்ளி 18:22 | பார்வைகள் : 3613


சென்னை சோழிங்கநல்லுார் அடுத்த செம்மஞ்சேரியில், 105 ஏக்கரில் சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கு கலந்தாலோசகர் தேர்வு பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.

சென்னையில் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பெரிய அரங்குகள் உள்ளன. சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தும் அளவுக்கு, இந்த அரங்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், அனைத்து விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும், போட்டிகள் நடத்துவதற்கும் தனியாக விளையாட்டு நகரம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. 

இதன் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., நிதியில் சென்னையில் சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக, பழைய மாமல்லபுரம் சாலையில், சோழிங்கநல்லுாரை அடுத்த செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தை போன்ற இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், செம்மஞ்சேரி தேர்வாகி உள்ளது.

இங்கு விளையாட்டு நகரம் அமைக்க, 105 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், சர்வதேச விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, கலந்தாலோசகரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சி.எம்.டி.ஏ., வெளியிட்டுஉள்ளது. 

நவ., இறுதிக்குள் கலந்தாலோசகர் இறுதி செய்யப்பட்டு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவங்கப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தன

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்