ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

13 ஐப்பசி 2023 வெள்ளி 18:12 | பார்வைகள் : 13066
ஹமாஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று மாலை தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இஸ்ரேலில் நடாத்தப்பட்ட ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் 13 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டதாக அறிவித்தார். இந்நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்வடைந்துள்ளதாக சற்று முன்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் Catherine Colonna அறிவித்துள்ளார்.
அதேவேளை, அவர் வரும் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கு பயணிக்க உள்ளதாகவும், அங்கு இஸ்ரேலிய பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1