Paristamil Navigation Paristamil advert login

("barbarie du terrorisme islamiste")"இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனம்" அதிபர் Emmanuel Macron.

(

13 ஐப்பசி 2023 வெள்ளி 18:31 | பார்வைகள் : 5613


இன்று காலை Pas-de-Calais பிராந்தியத்தில் Arras நகரில் உள்ள lycée Léon-Gambetta உயர்நிலைப் பள்ளியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அங்கு உள்துறை அமைச்சர்  Gérald Darmanin, தேசிய கல்வி அமைச்சர் Gabriel Attal மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேரில் சென்ற அதிபர் Emmanuel Macron; பள்ளியின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அதிகாரிளுடன் கலந்து உரையாடிய பின்னர், பத்திரிகையாளர்களுக்கு தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்தார்.

குறித்த தாக்குதலை ("barbarie du terrorisme islamiste")"இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனம்" என கண்டித்த அதிபர், மேலும் பல உயிர்கள் பலியாகாமல் பயங்கரவாதியுடன் போராடி மடிந்த ஆசிரியருக்கு மரியாதை அஞ்சலி செலுத்தினார், தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அனைவருக்கும் துறைசார்ந்து நன்றி கூறினார்.

"ஒற்றுமை, ஒன்றுபட்ட மக்களாக எழுந்து நிற்க்க வேண்டும், பயங்கரவாதத்திற்கு அடிபணியக்கூடாது, எதுவும் நம்மை பிரிக்க அனுமதிக்கக்கூடாது" என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இன்று Yvelines பகுதியில் Lycée Condorcet அருகில் வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனை அதிபர் Emmanuel Macron "இன்று மற்றும் ஒரு பாடசாலை மீது நடத்தப்பட இருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது" எனவும் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்