COVID 19 நோய்த்தொற்று 2020 போல் மீண்டும் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில்.
14 ஐப்பசி 2023 சனி 06:12 | பார்வைகள் : 4767
பல லட்சக்கணக்கான உயிர்களை பலியாக்கி, உலகத்தையே பிரட்டி போட்ட COVID-19 தொற்று நோய் மீண்டும் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது, ஆனால் 2020 போல் மக்கள் மத்தியில் பயமோ, பீதியோ இல்லை. மக்கள் தடிமன் காய்ச்சல் போல் சாதரணமாக கடந்து செல்கிறார்கள். காரணம் இன்று இருக்கும் 'variants' மாறுபாடு கொண்டு COVID-19 வைரஸ் தாக்கம் குறைந்ததா?
இந்த கேள்விக்கு பதிலளித்த Lille பல்கலைக்கழக மருத்துவமனையின் CHU (வடக்கு) தொற்றுநோயியல் நிபுணர் Philippe Amouyel "covid வைரஸ் சீனாவில் இருந்து 2020 வந்தது போல் இன்று மாறுபாடுகளுக்ப் பின் சற்று வீரியம் குறைந்து இருப்பது உண்மைதான், ஆனால் அன்று இருந்த மனப் பயத்தில் இன்று மக்கள் இல்லை. அவர்கள் மனத்துணிவு பெற்றுவிட்டார்கள் என்பது முதல் காரணம், அடுத்து தடுப்பூசிகள். ஏறத்தாழ ஏற்கனவே நோய்த்தொற்றுக்கு ஆளானதால் எங்களின் உடலும் குறித்த வைரஸ்சை எதிர்க்கும் பலம் பெற்றுவிட்டது" என குறிப்பிடுகிறார்.
அவர் குறிப்பிடுவது உண்மைதான் என்பதை உணர கடந்த கால வரலாறு ஒன்று 1918 'Spanish flu' என்னும் பெரும் தொற்று நோய் ஏற்பட்டு பல மில்லியன் கணக்கான மக்கள் உலகில் பலியானார்கள், அன்றைய காலகட்டத்தில் மருத்துவ விஞ்ஞானம், இன்றுபோல் வளர்ந்து கூட இருக்கவில்லை. எப்படி உலகம் 'Spanish flu' பெரும் நோய்த் தொற்றில் இருந்து மீண்டும் வந்தது என்றால், ஒன்று மனத் துணிவு, மற்றது மனித உடல் குறித்த நோயை எதிர்க்க தயாராகி விட்டதுதான்.