தாக்குதல் இடம்பெற்ற பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட கல்வி அமைச்சர்!

14 ஐப்பசி 2023 சனி 10:59 | பார்வைகள் : 8750
பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற Arras நகரில் உள்ள Gambetta-Carnot உயர்கல்வி பாடசாலைக்கு உள்துறை அமைச்சர் கேப்ரியல் அத்தால் (Gabriel Attal) விஜயம் மேற்கொண்டார்.
இன்று சனிக்கிழமை காலை அவர் அங்கு பயணம் மேற்கொண்டு அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடினார். 30 நிமிடங்களுக்கு மேலாக குறித்த பாடசாலையில் அவர் நேரம் செலவிட்டார். அனைத்து ஆசிரியர்களையும் சந்தித்கு உரையாடினார். அவருடன் Hauts-de-France மாகாண முதல்வர் Xavier Bertrand உடன் இருந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை குறித்த பாடசாலையில் வைத்து Dominique Bernard எனும் ஆசிரியர் கொல்லப்பட்டிருந்தார். மேலும் மூவர் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.